• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக மற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி கருணாநிதிக்கு அவரது இல்லத்தில் மரியாதை

December 3, 2018 தண்டோரா குழு

உலக மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு கருணாநிதியின் இல்லத்தில் மாற்றுதினாளிகள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி உலக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் சம உரிமை
கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் மனிதன் உடலில் பாதிப்பு உள்ளவர்கள் ஊனமுற்றவர்கள் என்று அழைப்பார்கள். ஆனால் ஊனமுற்றவர்கள் என்ற அந்த வார்த்தை பயன்படுத்தி கேலி கிண்டல் செய்வார்கள். அந்த வார்த்தை அவர்களின் குறைபாட்டை குறிப்பதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி உடலில் பாதிப்பு உள்ளவர்களை ஊனமுற்றவர்கள் என அரசு ஆவணங்களில் குறிப்பிடக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று தான் குறிப்பிடவேண்டும் என உத்திரவிட்டார். கருணாநிதியின் உத்தரவையடுத்து அரசு ஆவணங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளின் என மாற்றப்பட்டது. இது மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியது. மாற்றுதிறனாளிகளை ஊனமுற்றவர்கள் என கேலி கிண்டல் செய்தவர்கள் எல்லாம் அதன் பின் அவர்களது வலியை உணர்ந்து அவர்களை சக மனிதர்களாவே பார்க்கும் மனநிலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளின் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்த மறைந்த கருணாநிதியின் சென்னை கோபாலபுர இல்லத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சிலர் நேரில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினர்.
பின்னர் அவரது வீட்டில் இருந்த கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, ரெ.தங்கம் தலைமையிலான தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தைச் சார்ந்த 40 மாற்றுத் திறனாளிகளுக்கு வேட்டி, புடவை, இனிப்பு மற்றும் ஒரு மூன்று சக்கர சைக்கிளையும், எஸ்.எஸ்.ஜோதி தலைமையிலான திராவிட மாற்று முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த 40 பேருக்கு, கண் கண்ணாடி, ஹாட்பேக், ஒரு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் படிக்க