• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக புலிகள் தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே விழிப்புணர்வு பேரணி

July 30, 2022 தண்டோரா குழு

உலக புலிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, பொள்ளாச்சி துணை இயக்குநர் கணேசன் தலைமையில் புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆனைமலை அடுத்த நா. மூ. சுங்கத்தில் தொடங்கி ஆழியார் வரை பேரணி நடைபெற்றது.

வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை WNCT சார்பில் நடைபெற்ற பேரணியில் கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உதவி வன பாதுகாவலர் செல்வம், வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ் தீன் வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் புலி வேஷமிட்டு பேரணியில் பங்கேற்றனர். வனத்துறையினர் தங்களது முகத்தில் புலியின் தோற்றம் பொருந்திய ஓவியத்தை வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை அடுத்து அட்டகட்டியில் உள்ள பயிற்சி முகாமில் புலிகள் வாழ்வியல் குறித்து கண்காட்சி இடம் பெற்றது.

மேலும் படிக்க