• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

October 13, 2022 தண்டோரா குழு

உலக பார்வை தினத்தை முன்னிட்டு கோவையில் பி.பி.ஜி.ஆப்தோமெட்டரி கல்லூரி மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக கண் நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வியாழக்கிழமை கடைபிடிக்கபடுகிறது.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக பார்வை தினத்தை முன்னிட்டு, பிபிஜி, ஆப்தோமெட்டரி கல்லூரி மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக கண்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பாக துவங்கப்பட்ட இந்த பேரணியை,பிபிஜி அப்டோமெட்ரி கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா, அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணா பிரகாஷ்,ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பொதுமக்களுக்கு கண்பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள், கண் பார்வை குறி்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர் எஸ் புரம் பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.

இது குறித்து அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் அருணா பிரகாஷ் கூறுகையில்,

நமது உடலின் மற்ற பாகங்களை நாம் பாதுகாப்பது, போன்று கண்களையும் பாதுகாக்க வேண்டும், கண்களில் நீர் வடிதல், கண்களில் பார்வை குறைபாடு, தூசி படுதல் போன்ற குறைபாடுகளை தகுந்த கண் மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.பி.ஜி.ஆப்தோமட்டரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா,கண் தொடர்பான நோய்கள் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணியை நடத்துவதாக குறிப்பிட்டார்.இதன் துவக்க நிகழ்ச்சியில், , பிபிஜி மேலாண்மை கல்லூரி முதல்வர் டாக்டர் வித்யா, பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சத்யசீலன்,மற்றும், டாக்டர் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆதித்யா, சாந்தனு சக்ரவர்த்தி, இந்து மதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க