July 7, 2018
தண்டோரா குழு
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ((Mark Zuckerberg)) உலகப் பணக்காரர்கள் வரிசையில், வாரன் பஃபெட்டை ((Warren Buffett)) பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் வலைத்தளம் தான்.அண்மையில் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டினால்,அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த மார்ச்சில் கடும் சரிவைச் சந்தித்த நிலையில்,மீண்டும் எழுச்சி கண்டுள்ளன.
இந்நிலையில்,உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்சும்,2-வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளனர்.
3-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி,பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.மார்க் ஜூகர்பெர்க் சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.இதன் மூலம், முதல் முறையாக உலகப் பணக்காரர்கள் வரிசையில் தொழில்நுட்பத்தின் மூலம் செல்வத்தை பெருக்கியவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.