• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2023 தண்டோரா குழு

லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய் பால் தானத்தை பெண்கள் முன்னெடுத்து செல்ல உதவி வரும் அமிர்தம் அறக்கட்டளைக்கு 1100 சிறப்பு தாய்ப்பால் சேகரிப்பு பாக்கெட்டுகளும், அதை பாதுகாப்பாக பராமரிக்க,வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல உதவும் 5 கூலர் பேக்களும் நன்கொடையாக லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7ன் தலைவி ராணி மோகனின் வழிகாட்டுதலில் நேற்று கோவை புரூக் பீல்ட் மாலில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்வில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியாவின் தேசிய தலைவி செரில் சந்தோஷ் கலந்துகொண்டு இந்த நன்கொடையை வழங்கிய லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 தலைவி மற்றும் உறுப்பினர்களை குறிப்பாக இந்த திட்டத்தின் கன்வீனர்கள் சீதாள், சவிதா, சிவகாமி மற்றும் இதர கன்வீனர்கள் சிந்து மற்றும் நேஹா ஆகியோரை வாழ்த்தினார்.

லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7ன் தலைவி ராணி மோகன் பேசுகையில் அவர்களின் அறக்கட்டளை பெண் குழந்தைகளின் உடல் நலம்,கல்வி, பெண்களின் முன்னேற்றம், முதியவர்களின் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் 54 ஆண்டுகளாக இந்தியாவியல் செயல்பட்டு வருவதாகவும், இதுபோன்ற பல சேவைகளை வரும் காலங்களிலும் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க