• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு எஸ்.பி.டி ம௫த்துவமனை சார்பில் விழிப்புணர்வு முகாம்

March 12, 2020

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு எஸ்.பி.டி ம௫த்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயும் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் சிறுநீரக விழிப்புணர்வு முகாமை இன்று நடத்தின.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12ம் தேதி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவையை சேர்ந்த எஸ்.பி.டி மருத்துவமனை மற்றும் தென்னக ரயில்வே இணைந்து கோவை ரயில் நிலையத்தில் சிறுநீரக விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாமை நடத்தின.

இந்த முகாமை ரயில் நிலைய இயக்குநர் சதீஸ் சரவணன், கோட்ட பொறியாளர் நல்ல முத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
எஸ்.பி.டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ம௫த்துவர் ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க