• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக சாதனை படைத்த ஒரே Shot ல் உருவான முதல் குறும்படம் !

May 11, 2021 தண்டோரா குழு

கொரோனா பரவல் காரணமான பெரும்பாலான திரைப்படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.திரைப்படத்துறையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு முறைகளில் படங்கள் தயாரிக்கப் படுகின்றன. எனினும் வழக்கமாக உருவாகும் திரைப்படங்களை தாண்டி சில இயக்குனர்கள் வித்தியாசமான முறையில் மாறுபட்ட திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்று “Single Shot” முறையாகும். பல வசனங்களையும், உணர்ச்சிகளையும் ஒரே Shot – ல் படமாக்கும் இம்முறையை இயக்க பலர் முயற்சிக்கின்றனர்.தற்போது இந்த முயற்சியில் சாதனை படைத்துள்ளார் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தைச்சேர்ந்த இயக்குனர் ஜெகதீஸ்வரன்.இவர்ஒரே Shot ல் “With love jaggy” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இதனை Real Reel Cinemas நிறுவனம் தயாரித்துள்ளது.

காதலின் அழகையும், வலியையும் உணர்த்தும் இந்த குறும்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த குறும்படம் “International book of records” ல் பல மொழிகளில் எடுக்கப்பட்ட முதல்
Single Shot குறும்படம் என்ற உலக சாதனையை படைத்துள்ளது.

இது குறித்து இக்குறும்படத்தின் இயக்குனர் ஜெகதீஸ்வரன் கூறும்போது,

சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு படைப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக With Love Jaggy உருவாக்கினேன். அதுவும் ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும் என்பதில் நானும் தயாரிப்பாளரும் தெளிவாக இருந்தோம் . ஒரு நடிகனாக இது அவருடைய முதல் குறும்படம் . Single Shot என்ற சவாலை ஏற்று மிக கச்சிதமாக முடித்துக்கொடுத்தார்.

பலவித இன்னல்களுக்கு மத்தியில் இக்குறும்படம் சிறப்பாக முடிக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மேலும் இப்படத்திற்கு உயிர்கொடுத்த ஒலி பொறியாளர் ராம்கி (கோவை பிலிம் ஸ்டுடியோ) அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றிகள் என்றார்.

தற்போது MX Player, Airtel Xstream, Hungama play, Movie wud, Moviflex, Shortflix போன்ற OTT தளங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க