• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக கோப்பை இறுதிப் போட்டி: நேரில் பார்க்க அகமதாபாத் செல்கிறார் சத்குரு!

November 18, 2023 தண்டோரா குழு

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று காண இருக்கிறார்.

உலகக் கோப்பை ஜுரம் முழு நாட்டையும் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கான தனது ஆதரவை சத்குரு அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார். அது குறித்தான காணொளி ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது,

“பாரத அணிக்கு என்ன ஒரு அற்புதமான விளையாட்டு தொடராக இது இருந்துள்ளது. நம் கிரிக்கெட் அணி விளையாட்டை முற்றிலும் புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது, விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10/10 என்பது யாரும் கேள்விப்படாதது! முன்மாதிரியான கேப்டன்ஷிப் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் அற்புதமான செயல்பாடுகள், சாதனைகள் ஏராளமாக இருப்பதால், இந்த வலிமையான அணி இறுதிப் போட்டியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் அந்த காணொளியில் இந்திய அணிக்கு ஆலோசனையாக, “ஒரு முக்கியமான விஷயம், நாம் எதிர் அணியை ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அதே வேளையில் அவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படவும் வேண்டாம். நம் கவனம் விளையாட்டை எப்படி முழுமையாக விளையாடுவது என்பதில் தான் இருக்க வேண்டும். மேலும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நீங்கள் கொண்டு வரும் மகிழ்ச்சியின் அளவைக் கருத்தில் கொள்ளுங்கள். அதை மறந்துவிட வேண்டாம். ஆனால் அதை உங்களின் தலையில் சுமக்க வேண்டாம். பந்தை அடியுங்கள், விக்கெட்டுகளை வீழ்த்துங்கள் அவ்வளவுதான்! மற்றவை நடக்கும்.

நம் வீரர்கள் அதைச் செய்வார்கள், முழு நாட்டிற்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருவார்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள். அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு, நான் உங்களுடன் இருக்கிறேன், போட்டியை நேரில் பார்க்கிறேன். இதனை நிகழ செய்வோம்.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க