September 29, 2021
தண்டோரா குழு
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில்
இருதயத் துறை சார்பில் பியர்ல் கிளினிக் எனும் இருதயத்திற்கான ஒருங்கிணைந்த மையம் துவக்க விழா இன்று காலை கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவமனை இருதயத்துறை துறைத் தலைவர் டாக்டர் ஜி. ராஜேந்திரன் புதிய பியர்ல் கிளினிக் குறித்து பேசினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றி, புதிய கிளின்க்கை துவக்கி வைத்தார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் திலீப் சிங் யாதவ், பஜாஜ் பின்சர்வ் தேசிய விற்பனை மேலாளர் சுனீஷ் சுப்பிரமணியன், பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் ஜே.எஸ். புவனேஸ்வரன்,பி.எஸ்.ஜி மருத்துவமனை முதல்வர் சுபா ராவ், மத்திய அதிரடிப் படை துணை கமாண்டன்ட் மருத்து அதிகாரி அனுத்தமா பிரதீப்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் பி.எஸ்.ஜி மருத்துவமனை உணவுத்துறை தலைவர் கவிதா நன்றியுரை ஆற்றினார்.