• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதல் இடத்தை பிடித்த நிர்மல் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு

December 9, 2020 தண்டோரா குழு

நாக்பூரில் நடைபெற்ற உலக அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்ற கோவையை சேர்ந்த நிர்மல் நாகேந்திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உலக அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது இதில் ரஷ்யா ஜப்பான் இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற 21 வயதுடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்மல் நாகேந்திரன், தனது திறமையின் மூலம் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த நிர்மல் நாகேந்திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் என பலரும் பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளரும் பேசிய நிர்மல் தனது கடுமையான பயிற்சியின் மூலம் இந்த வெற்றியை பெற்றுள்ளதாக கூறினார். 250 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது தனக்கும், தன் பெற்றோருக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க