June 28, 2018
தண்டோரா குழு
கோவையைச் சேர்ந்த மதன் எனும் இளைஞர் உலக அமைதிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன பயணத்தை துவக்கியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த மதன் கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகன பயணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியா எல்லையான இமயமலை வரை சுமார் ஏழாயிரத்து மூன்னூறு கிலோ மீட்டர் பயணம் செய்தார்.
இந்நிலையில் உலக அமைதிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையிலிருந்து காஷ்மீர் வரை பயணம் செய்கிறார்.சுமார் எட்டாயிரம் கிலோ மீட்டர் பயணத்தை இருபத்திரண்டு நாட்களில் நிறைவு செய்யும் வகையில் கோவையில் இருந்து இன்று தனது விழிப்புணர்வு பயணத்தை துவக்கி உள்ளார்.
மேலும்,இந்தியன் ரெக்கார்டு ஆப் புக்கில் இடம் பெரும் வகையில் இந்த பயணத்தை முடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.