• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகில் முதன்முறையாக புலிக்கு கொரோனா வைரஸ் உறுதி

April 6, 2020 தண்டோரா குழு

அமெரிக்காவில் புலி ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும்கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பல்லாயிரகணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் கொரோனாவுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மனிதர்களை மட்டுமே அச்சுறுத்தி வந்த இந்த கொடிய நோய் இப்போது விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் Bronx மிருககாட்சி சாலையில் இருக்கும் 4 வயது நாடியா என்ற மலையான் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில புலிகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகில் முதன்முறையாக விலங்கிற்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது அமெரிக்காவில் பெரிதாக இருக்கும் மிருககாட்சி சாலைகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

இது குறித்து Wildlife Conservation Society (வனவிலங்கு பாதுகாப்பு சங்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், Nadia என்ற நான்கு வயது பெண் சிங்கம் ஒன்று மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.ஏனெனில் குறித்த புலியானது உலர்ந்த இருமல் மற்றும் பசியின்மையால் சாப்பிடாமல் இருந்தது.
அதன் முடிவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் சகோதரியான Azul என்ற புலியும் இரண்டு அமுர் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் Nadia உட்பட அனைத்து விலங்குகளும் குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் புலி ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதுடன், குறித்த மிருககாட்சி சாலை கடந்த மாதம் 16-ஆம் திகதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க