• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகிலேயே யூடியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் 8 வயது சிறுவன் – ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

December 4, 2018 தண்டோரா குழு

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூபில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை 8 வயது சிறுவன் விமர்சனம் செய்து ஆண்டுக்கு 155 கோடி ரூபாய் வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தான்.

போர்ப்ஸ் பட்டியல் என்பது யூடியூபில் அதிகம் சப்ஸ்கிரைப் மூலம் அதிகம் சம்பாதிப்போருக்கான பட்டியலை வெளியிடுவது. அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்ற சிறுவன் அவர் பெற்றோர் உதவியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் (Ryan Toys Review) என்ற யூடியூப் சேனலை உருவாக்கினான். அதில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை விமர்சனம் செய்ததன் மூலம் ரியான் உலகமெங்கும் பிரபலம் ஆனான். இந்த சேனலை தற்போது வரை ஒரு கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இதன்மூலம் 2017-2018 ஆம் ஆண்டு வரைக்கும் முந்தைய வருமானமாக 155 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளான் ரியான். இதன் மூலம் யூடியூப்பில் அதிகம் சம்பாதிப்போருக்கான போர்ப்ஸ் பட்டியலில் 8 வயது சிறுவனான ரியான் முதலிடம் பிடித்துள்ளான்.

மேலும் படிக்க