April 12, 2018
தண்டோரா குழு
திருவடந்தையில் நடைப்பெற்று வரும் ராணுவ கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“காலை வணக்கம் என்று தமிழில் பேசி ராணுவ கண்காட்சியில் உரையை தொடங்கினார்.முதன்முறையாக நான் ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது.மேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்கவும்,சிறு குறு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்.அமைதியை விரும்பும் இந்தியா எல்லையில் நாட்டு மக்களுக்காக தனது பங்களிப்பை அளிக்கிறது.
உலகிற்கு அஹிம்சையை போதித்த நாடு நமது நாடாகும்.போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட,மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது”.என்றார்