• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை !

April 3, 2017 தண்டோரா குழு

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சையை தெற்கு ஆப்ரிகாவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் பகுதி மருத்துவர்கள் செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் 19 மணிநேரம் நடைபெற்றது.

36 வயது பால் ஹோர்னர் என்பவருக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது 5 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. மரண தருவாயில் இருந்த அவரிடம் இந்த சிகிச்சை குறித்து மருத்துவர்கள் பேசி, அவருடைய ஒப்புதலை பெற்றனர்.

இதையடுத்து, ஜோகன்னஸ்பர்க் கல்வி மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை பிப்ரவரி 1௦-ம் தேதி, பேராசிரயர் மைரோன் டனுஸ் தலைமையில் கீழ் செய்தனர்.

அறுவைச் சிகிச்சை குழுவிலிருந்த டாக்டர் டாம் டவுன்லே கூறுகையில், “மருத்துவ சரித்திரத்தில் இது ஒரு பெரிய திருப்புமுனை ஆகும். ஒருவருடைய பழைய உடலை நீக்கி விட்டு அவருக்கு புதிய உடலை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எல்லையற்ற சாத்தியகூறுகளை செய்ய முடியும் என்று இந்த சிகிச்சையின் வெற்றி தெளிவாக காட்டுகிறது.

மனிதனின் வேதனையை தணிக்க மருத்துவ ஆய்வு, தொழில்நுட்பம், நோயாளிக்கு தரும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
ஹோர்னரின் உடல் 2 வருடங்களில் முழுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அவர் விரைவில் குணமடைந்து வருவதை பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த சிகிச்சைக்கு முன், ஹோர்னரின் உடல் புற்றுநோயால் பதிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் தான் உயிரோடு இருக்கும் நிலையில் இருந்தார். அந்த சமயத்தில் தான் விபத்தில் சிக்கி, மூளை செயல்படாமல், உடலின் மற்ற உறுப்புகள் நல்ல முறையில் செயல்படுகிற 21 வயது வாலிபனுடைய உடல் எங்களுக்கு கிடைத்தது. தங்களுடைய மகனின் உடலை இந்த சிகிச்சைக்கு பயன்படுத்த அவனுடைய பெற்றோர் அனுமதி தந்தனர். தங்களுடைய மகனின் உடல் மற்றொருவருக்கு வாழ்வு தருவதை எண்ணி அவர்கள் மகிழ்ந்தனர்.

பிப்ரவரி மாதம் 1௦-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையின் பலனாக ஹோர்னர் 85 சதவீதம் உடல் நலம் தேறியுள்ளார். ஆரோகியமான நபரை போல் நடக்கமுடிகிறது, உணவு உட்கொள்ள முடிகிறது, சாதாரண பணிகளை அவரால் நம்பிக்கையுடன் செய்யமுடிகிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க