• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் மிக நீளமான கோட் அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா

May 2, 2017 தண்டோரா குழு

நியூயார்க்கில் நடைபெற்ற மெட் கலா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, ஃபேஷன் உலகின் ராணி என வர்ணிக்கப்பட்டார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குவாண்டிக்கோ நாடகத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். ஃபேஷன் உலகின் மீது அதீத காதல் கொண்ட பிரியங்கா அமெரிக்காவின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளான எம்மி,ஆஸ்கர் போன்ற விருது விழாக்களில் தனது ஆடை அலங்காரத்தால் தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் புதுவிதமான, வித்யாசமான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை தன்வசப்படுத்துவதில் சிறந்தவர்.

தற்போது, இவர் மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார். காரணம் நியூயார்க்கில் நடைபெற்ற மெட் கலா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ‘டிரென்ச் கோட்’ தான். இது தான் உலகின் மிக நீளமான கோட் ஆகும்.

தலை முதல் கால் வரை இவரின் சிகை அலங்காரம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.பிரியங்காவின் முடி அலங்காரம் மற்றும் கணுக்காலில் அவர் அணிந்திருந்த கறுப்பு நிற பூட்ஸ், அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

பிரியங்காவின் இந்த ‘டிரென்ச் கோட்’டை ரால்ப் லாரன் என்பவர் வடிவமைத்துள்ளார். நியூயார்க்கில் மிகவும் பிரபலமான ஃபேஷன் அண்ட் லைஃப் இதழில், பிரியங்காவின் இந்த ஆடை சிறந்த ஆடையாக இடம்பெற்றது.

மெட் கலாவிற்கு வந்த அனைவரையும் கவர்ந்த பிரியங்கா, அவர் நடித்துள்ள முதல் ஹாலிவுட் திரைப்படமான ‘பே வாட்ச்’ திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.

மேலும் படிக்க