November 27, 2017
தண்டோரா குழு
ஹைதராபாத் வரும் ட்ரம்ப் மகளுக்கு உலகின் மிகப்பெரிய டைனிங் டேபிளில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரில்சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நாளை (நவம்பர் 28) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பங்கேற்ப்பதற்காக இந்தியா வருகிறார். ஹைதராபாதிலுள்ள ஹைதராபாத் சர்வதேச மாநாடு சங்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இவாங்கா டிரம்ப் அம்மாநாட்டில் உரையாற்ற வுள்ளார்.
கடந்த 1893ம் ஆண்டில் ஹைதராபாத் நவாப்களால் பாலாக்னுமா அரண்மனை கட்டப்பட்டது. சுமார் 1௦ ஆண்டுகளுக்கு முன், தாஜ் நிறுவனத்தினரால், அதை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டது. அந்த ஹோட்டலில் இவாங்கா டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 100 விருந்தினர்களுக்கு இரவு உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த உணவு அறையின் விசேஷம் என்னவென்றால், அது உலகிலேயே மிக பெரிய உணவு அறை. அந்த அறையில் சுமார் 101 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடலாம். அதனால் தான் அந்த அறைக்கு ‘1௦1 டைனிங் ஹால்’ என்று பெயர்.
முன்னதாக ஹைதராபாத் வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைப்பார். அதன்பிறகு, மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்வார்.
இவாங்கா டிரம்ப், இத்தாலிய மற்றும் டூடர் கட்டிடக்கலையின் கலவையாக விளங்கும் அந்த அரண்மனையை சுற்றி பார்ப்பார். இவாங்கா டிரம்ப் ஹைதராபாத்தில் சுமார் 24 மணிநேரம் இருக்க நேர்வதால், அவர் ஹைதராபாத் நகரத்தை சுற்றியும், பாலாக்னுமா அரண்மனையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சார்மினாரை பார்க்க செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.