• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் நீளமான ரயில்வே வழித்திடம் சீனாவில் தொடக்கம்

December 29, 2016 தண்டோரா குழு

சீனாவின் வளமை நிறைந்த கிழக்குப்பகுதியில் இருந்து வளமை குறைந்ததென் கிழக்கு பகுதியை இணைக்க 2,252 கிலோமீட்டர் தூரம் கொண்ட உலகின் நீளமான ரயில் வழித்திடம் சீனாவில் புதன்கிழமை(டிசம்பர் 28) செயல்பாட்டிற்கு வந்தது.

இது குறித்து சீன ரயில்வே அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியாதாவது:

2,252 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஷன்காய் குன்மிங் பகுதியை இணைக்கும் இந்த ரயில்வேவழித்தடம் ஷிஜியாங்,ஜியாங்ஷி, ஹுனான், குவாங்ஷூ, யுனான், ஆகிய ஐந்து மாகணங்கள் வழியாக செல்கிறது. இதற்கு முன் 36 மணிநேரம் பயணிக்க வேண்டிய பயணம் 11 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயிலானது அதிகபட்ச வேகமாக மணிக்கு 33௦ கிலோமீட்டர் செல்லும் திறனுடையது. சீனாவில் அதிவேக கிழக்கு மேற்கு ரயில் இது ஆகும்.

கடந்த 2௦12ல், பெய்ஜிங்-குவாங்ஷூ இடையே 2,298 கிலோமீட்டர் தொலைவு கொண்ட வழித்திடம்செயல்ப்பாட்டிற்கு வந்தது.மேலும் 20,௦௦௦ கிலோமீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் வழித்திடம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2030ம் ஆண்டுக்குள், 45,000 கிலோமீட்டர் தூரம் அதிகரிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க