• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

March 14, 2018 தண்டோரா குழு

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் 76வது வயதில் இன்று காலமானார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பகுதியில் கடந்த 1942ம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். கடந்த 1963ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு அவரது உடல் அங்கங்களின் செயல்பாடுகளையும், பேச்சுத்திறனையும் இழந்தார். பின்னர், நாற்காலியின் துணையுடனே நடமாடிய அவர், கணினி மூலமாகவே மற்றவர்களுடன் உரையாற்றி வந்தார்.

பல ஆராய்ச்சி முடிவுகளை அடுத்தடுத்து தந்து, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பூமி உருவான விதம், வேற்றுக்கிரக வாசிகள், ஒளியின் வேகம் ஆகியவற்றை விளக்கி, நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பூமி இருக்காது என்றும் அதிரவைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

இது மட்டுட்டுமன்றி பூமியில் இருக்கும் மனிதர்கள் வேறு கிரகங்களுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என எச்சரிக்கை விடுத்த ஸ்டீபன் ஹாக்கிங், ஒளியின் வேகத்தை மிஞ்சி நாம் பயணிக்கும்போது டைம் டிராவல் சாத்தியம் என்றும் கூறினார்.

தனது ஆராய்ச்சி முடிவுகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது, 12 கவுரவ டாக்டர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங், இந்த நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானியாக போற்றப்பட்டவர்.

மோட்டோ நியூரோன் நரம்பியல் நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, சில காலங்களே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறிய நிலையில், அந்த கணிப்புகளை உடைத்தெறிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், இன்று தனது 76வது வயதில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

அவரின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர் பெரிய விஞ்ஞானி, அசாதாரண மனிதர்,அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க