December 27, 2025
தண்டோரா குழு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் சிற்பி 90 ஆம் அகவை விழா டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் என்.ஜி.பி.கலை அரங்கில் நடைபெற்றது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி இந்த நிகழ்விற்குத் தலைமையேற்றுச் சிறப்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராகத் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு m ப.மருதநாயகத்தின் “ SIRPI POET AS A SCULPTOR ” என்ற ஆங்கில நூலினையும் , மருத்துவர் நா.செல்வராஜனின் ” உயிர்காப்பும் இன்றியமையா முதலுதவி வழிமுறைகளும் ” என்ற மருத்துவ நூலினையும் வெளியிட்டுச் சிறப்பித்தார்.
இவ்விழாவிற்கு புரிந்தோருக்கு வருகை டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் மதுரா அருண் பழனிசாமி வரவேற்புரை வழங்கினார்.முனைவர் ப.மருதநாயகம் தான் எழுதிய நூலைப் பற்றி எடுத்துரைத்தார்.பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் இந்த நிகழ்வில் ஏற்புரை வழங்கிச் சிறப்பித்தார்.
பெ.இரா.முத்துசாமி விருது பெறுபவர்கள் பற்றிய அறிமுகவுரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் விருதுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.உ.வே.சா.தமிழறிஞர் விருது முனைவர் க.இரத்தினத்திற்கும், பெரியசாமித்தூரன் படைப்பாளி விருது எழுத்தாளர் அம்பைக்கும்,டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த்தொண்டர் விருது டாக்டர் கு.கணேசனுக்கும் மற்றும் சிறப்பு விருதுகள் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், அ.லோகமாதேவி, கி.சிவா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தெ.ஞானசுந்தரம் கலந்து கொண்டார்.இயகோகா என்.சுப்ரமணியம் நன்றியுரை வழங்கினார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன், இணைச் செயல் அலுவலர் முனைவர் மா.நடேசன் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்.புல முதன்மையர்கள் துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.