• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா

December 14, 2024 தண்டோரா குழு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11 ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று என்.ஜி.பி. கலையரங்கில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை ஆற்றினார்.தொடர்ந்து மருத்துவர் ரேஷ்மி ராமநாதனின் உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டு தலைமையுரை வழங்கினார்.

விருது பெறுபவர்கள் பற்றி பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அறிமுகவுரையாற்றினார். மேலும்,வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வீ.முத்துராமலிங்கம் விருதுகள் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில்,முனைவர் ப.மருதநாயகம் , முனைவர் தெ.ஞானசுந்தரம் , தஇயகாகோ என்.சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருதும் முனைவர் அ.பாண்டுரங்கன் உவே.சா.தமிழறிஞர் விருதும்
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருதும் பெற்றனர்.

மேலும், முனைவர் சொ.சேதுபதி , எழுத்தாளர் புன்னகை பூ ஜெயக்குமார் , சூலூர் ஆனந்தி ஆகியோருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பேச்சாளர் பாரதி பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா.முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க