• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய விருது வழங்கும் விழா !

January 8, 2023 தண்டோரா குழு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் 9ஆம் ஆண்டு விருதுகள் வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி இந்த நிகழ்வில் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்புச் செய்து தலைமையுரை வழங்கினார்.

அவர் தமது உரையில்,

மொழி என்பது வளர வேண்டும் என்றும் மொழியின் பாரம்பரியம் சிதைவுறாமல் காப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார். இவ்விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் சிறப்புப் பற்றியும் தமிழ்ப் பாரம்பரியம் பற்றியும் கூறித் தமது உரையை நிறைவு செய்தார்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் செயலர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அறக்கட்டளை உறுப்பினர் முனைவர் தே. ஞானசுந்தரம் ஆகிய இருவரும் விருது பெறுபவர்கள் பற்றிய அறிமுகவுரையாற்றினார்கள்.

கோவை மருத்துவ மையம் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் க.ராஜேந்திரன் முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் எழுதிய “ஒப்பில் கம்பன்” நூலைப் பற்றிய அறிமுகவுரையாற்றினார்.அந்த நூலின் சிறப்பு அந்த நூலில் கம்பனின் கவித்திறத்தை முனைவர் மருதநாயகம் அவர்கள் எடுத்தாண்டிருந்த விதத்தை நயம்பட உரைத்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி‌.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் விருதுகள் வழங்கிச் சிறப்புரை வழங்கினார்.

அவர் தமது உரையில் தமிழ்மொழியின் வளம் மென்மேலும் மெருகேறிட இதுபோன்ற அங்கீகாரங்கள் நிச்சயம் அவசியம் என்று கூறினார்.உ.வே.சா.தமிழறிஞர் விருது முனைவர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப் பட்டது. டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித் தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருதுகள் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் கு.அசோக் குமார், எழுத்தாளர் சு.வேணுகோபால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.முனைவர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம்,முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா. முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க