• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு! – முக ஸ்டாலின்

June 17, 2021 தண்டோரா குழு

உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்; 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளேன்; ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.

பிரதமருடனான சந்திப்பு மகிழ்வு, மன நிறைவை தருகிறது; தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு
முழு ஒத்துழைப்பு தருவதாக
பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

“உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு!தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்!”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க