• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உரிய நேரத்தில் நேரில் சந்திக்கலாம் இலங்கை தமிழர்களுக்கு ரஜினி அறிக்கை

March 29, 2017 தண்டோரா குழு

உரிய நேரம் வரும் போது நாம் நேரில் சந்திப்போம் என இலங்கை தமிழர்களுக்கு ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி இலங்கை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள விருந்தார்.இதையடுத்து, திருமாவளவன் , வை.கோ, வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என அவரை வலியுறுத்தினார்.

இதையடுத்து அவரகளது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.எனினும் ரஜினியின் அறிவிப்பு தங்களை ஏமாற்றமடைய செய்வதாகவும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராவும் இலங்கை தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்காக ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உங்கள் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.நம் வாழ்வில் நல்லவை தொடர்ந்து நடக்கட்டும்.உரிய நேரம் வரும் போது நாம் நேரில் சந்திப்போம் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க