February 19, 2018
தண்டோரா குழு
போர்னியோ தீவில்உராங்குட்டன் குரங்கை கொன்றவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (ஐ.யூ.யு.என்.என்) உராங்குட்டன் குரங்கு இனத்தின் வகைகளான போர்ணனே மற்றும் சுமந்ரான் வகை குரங்கள் அழிந்து வரும் விலங்குகளாக அறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர்னியோ தீவின் கிழக்கு குடா மாவட்டத்திலுள்ள கிராமவாசிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு துணிமணிகளைக் கொண்ட ஆண் உராங்குட்டனின் சடலத்தை கண்டுபிடித்தனர். அதன் உடலில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.
அப்போது, தங்கள்பயிர்களையும் பனைஎண்ணெய் தோட்டங்களையும் அந்த உராங்குட்டன் குரங்கு அழித்துவிட்டதால் அதனை கொன்று விட்டாதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், 5 பேரில் ஒருவன் 13 வயதான சிறுவன் என்பதால் அவன் விடுவிக்கப்பட்டான். மற்றவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கொலை செய்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையாகவும், சுமார் 7,400 டாலர் அதிகபட்ச அபராதமாகவும் கட்டச் சொல்லி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஆய்வின் படி, “போர்னியோவில் உள்ள உராங்குட்டான்கள் 1999 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 150,000 க்கும் அதிகமான குரங்குள் இருந்தது தற்போது அவை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. காலாவதி, காகிதம், பாம் எண்ணெய் மற்றும் சுரங்கத்திற்கான காடுகளை வெட்டுவதன் மூலம் பெரும்பாலும் இந்த இனக் குரங்குகள் அழிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.