January 31, 2018
தண்டோரா குழு
பாஜகவை விட்டு விலகுவதாக வரும் தகவல் அவதூறானது; உயிர் இருக்கும் வரை பாஜகவில்தான் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை வழங்கும் முறையை, தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,
“தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தான் விலக உள்ளதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. எனது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் தான் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீது எந்த அதிருப்தியும் இல்லை; பாஜக தலைமைக்கு எந்த கடிதத்தையும் நான் அனுப்பவில்லை.கட்சி பலமடைந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்”.இவ்வாறு அவர் கூறினார்.