November 22, 2020
தண்டோரா குழு
நம் முன்னோர்கள் வழிபட்ட, போற்றுதலுக்குரியதாக இருந்த நீர்நிலைகள், இன்று நம் தலைமுறையினரால் கேளிக்கைக்காக, மது அருந்தவும் பயன்படுத்துவது சரியா..??
நொய்யல் ஆற்றின் இரண்டாம் அணைக்கட்டான புதுக்காடு_அணைக்கட்டு பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் காலை களப்பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்து நீரை வழிபட்டனர்.யானைகள் போன்ற வனவிலங்குகள் அதிகம் நீர் அருந்த வரும் இந்த பகுதியில் நிறைய மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் காகிதங்கள் எடுக்கப்பட்டது.
நீர்நிலைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது பல்வேறு உயிரினங்களுக்கும் உரியதாகும். அதனைக் கண்டு ரசித்து பாதுகாக்காமல், அதன் உயிர் சூழலை கெடுக்கும் விதமாக சில மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களின் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.