• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரைப் பறிக்கும் பேருந்து நிலைய தேநீர் கடை விபத்துக்கள்.

March 22, 2016 வெங்கி சதீஷ்

தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவிலேயே பேருந்து நிலையத்தில் தேநீர் கடை அமைப்பது என்பது அனைவருக்கும் ஒரு லாபகரமான தொழிலாகவே உள்ளது. ஏனெனில் அங்கு வைக்கப்படும் கடைகளுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் வருவார்கள். மேலும் அங்கு வருபவர்களில் ஒருசிலர் மட்டுமே தொடர்ந்து வருபவர்கள் மற்றபடி ரன்னிங் கிரௌடு எனப்படும் வழிப்போக்கர்கள்தான்.

அதனால் டீயின் சுவை குறித்து யாரும் கவலைப்படமாட்டார்கள். பேருந்து வருவதற்குள் குடித்துவிட்டு ஓடவேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருக்கும். எனவே பேருந்து நிலைய டீ கடை என்பது எப்போதுமே லாபமாக இருக்கிறது. ஆனால் தற்போது பல கடைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒதுக்கப்படும் கடைகளில் இடநெருக்கடி என்பது தவிர்க்க முடியாததாகிறது.

மேலும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் தங்களது நிதிநிலையை அதிகரிக்க பேருந்து நிலைய கடைகளின் வாடகைகளை மிக அதிகளவு உயர்த்தியுள்ளன. எனவே டீ கடை மட்டுமே வைத்து அவர்களால் பிழைப்பு நடத்த முடிவதில்லை. மேலும் பேக்கரி பொருட்களும், அன்றாட மளிகைப் பொருட்களும் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் அதிக இட நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் டீ தயாரிப்புக்கு தேவையான அடுப்பு, கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே அந்த சின்ன இடத்தில் தான் வைக்கப்படுகின்றன. அதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட அங்கிருந்து தப்பிப்பது என்பது கல்லாவில் இருப்பவருக்கும் டீ மாஸ்டருக்கும் முடியாத காரியம். இது போன்ற ஒரு நெருக்கடியில்தான் இன்று நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு டீ கடையில் இருந்த ஒரு கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் கடையில் இருந்த இருவரும் தீக்காயம் பட்டதோடு தப்பிக்க வழியின்றி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இது போன்ற சம்பவம் அடிக்கடி நடக்காமல் இருக்க பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மிக கவனமாக இருந்து நெருக்கடியாக இருக்கும் கடைகளை கண்காணித்து அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

மேலும் படிக்க