• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம் !

December 29, 2018 தண்டோரா குழு

உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி 1989 மோட்டார் வாகன விதியில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனிவரும் புதிய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு அம்சங்களோடு லேசர் பதிவெண் நம்பர் பிளேட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டம் வரும் 2019 ஏப்ரல் 1 முதல் புதிய நம்பர் பிளேட் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் மூலம் வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும் மேலும் திருடப்பட்ட வாகனங்களை விரைவில் போலீஸார் கண்டுபிடிக்க முடியும். இதன் முலம் வாகன திருட்டு குறைய வாய்ப்பு உள்ளது.இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் வாகன உற்பத்தியாளர்களும் டீலர்களும் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க