• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்நீதிமன்ற உத்திரவு கூட முதல்வருக்கு தெரியாதா – டிராபிக் ராமசாமி

November 25, 2019 தண்டோரா குழு

கோவை இரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்துக்கு எந்தவிதமான அறிவிப்பு பலகை இல்லாமல் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக அமெரிக்காவில் இருந்தும், கோவை மக்களிடம் தொடர் புகார்கள் வந்ததாகவும் கூறி இரயில் நிலையத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆய்வு செய்தார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இரயில் நிலையத்தில் 30க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுப்பட்டு இருந்தனர். இரயில் நிலையத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் பணம் வசூலிக்கும் மையத்தில் ஒப்பந்தம் குறித்தான ஆவணங்கள் வாங்கி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர்,

இரயில் நிலைய வாகன நிறுத்ததில் அதிக பணம் வசூலிப்பதாகவும் வந்த புகாரைதொடர்ந்து தான் ஆய்வு செய்ய வந்தேன்.ஆனால் அரசு அதற்கான அரசானை அளித்துள்ளது.சட்டபடி இரயில்வே இலவச பார்க்கீங் அளிக்கனனும் . இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன்.மக்கள் எந்தபிரச்சனை என்றாலும் தைரியமாக கேட்க வேண்டும்.
கொடிக்கம்பம் வைக்ககூடாது என உத்தரவு உள்ளது. ஆனால் முதலமைச்சருக்கு தெரியவில்லை அதைப்பற்றிப் தெரியாமல் அறிக்கை விடுகிறார் முதல்வர்.உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்து தெரியாமல் இருப்பது முதலமைச்சர் பதவிக்கு லாக்கி இல்லை, ராஜினாமா செய்துவிட்டு போகல்லாம். அதைப்பற்றி தெரியாமல் ஏன் அந்த பதவியில் இருக்கனும் என கேள்வி எழுப்பினார்.

பேனர், கொடிக்கம்பம் வைப்பது போலீசார் உடந்தையாக இருப்பதும், ஆதாரத்தை ஆழிப்பது அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது அரசியல்வாதிகள் கேலிக்கூத்தாக மாற்றி வருகிறார்கள்.உயர்நீதிமன்றம் எதிராக உள்ள கோவில் இன்று இடிக்கவுள்ளனர், உத்தரவு வாங்கி ஒரு வருடமாகியும் இடிக்கவில்லை, நீதிமன்றம் அவமதிப்பு பெற்றபிறகு இன்று பணி நடக்கிறது. நானும் இந்து தான், ஆனால் கடவுளை வைத்து சம்பாரிக்க நினைக்கார்கள் அது தவறானது.

என கூறினார்.

மேலும் படிக்க