• Download mobile app
11 Mar 2026, WednesdayEdition - 3682
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்நடை பாதை சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்

February 8, 2017 தண்டோரா குழு

மும்பையில் தஹிசர் பகுதியில் உள்ள உயர் நடைபாதையின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில்,

“உயர் நடைப்பதையின் சுவர் இடிந்து விழுந்ததில் மூத்த குடிமகன் ஒருவர் படுகாயம் அடைந்தார்” என்றார்.

பேரிடர் கட்டுப்பாட்டு அதிகாரி கூறுகையில், “மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள மேற்கு தஹிசர் என்னும் இடத்தில் உயர் நடைபாதை அமைந்துள்ளது. அந்த நடைபாதையின் சுவரில் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் சுனில் குல்கர்னி என்னும் 65 வயது முதியவர் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக வேறு சேதம் எதுவும் இல்லை” என்றார்.

மும்பை எம்எச்பி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி கூறுகையில், “இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க