• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்திர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார் அவர்களால் அதை செய்ய முடியுமா.?- அமைச்சர் கே.என்.நேரு

September 6, 2023 தண்டோரா குழு

கோவை வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அத்துறையின் அமைச்சர் கேஎன்.நேரு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் 11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் 67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 32.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு பேசுகையில்,

கோவை மாநகரில் நாள் ஒன்றுக்கு 298 mlt குடிநீர் தேவை எனவும் ஆனால் 214 mlt தண்ணீர் தான் கிடைத்து விருவதாகவும் தெரிவித்தார். பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது என தெரிவித்த அவர், அத்திட்டத்தில் இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி உள்ளது என்றார். 188 mlt தண்ணீர் கூடுதலாக வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும் என்றார். மேலும் சிறுவாணி, ஆழியார் அணைகள் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகரில் 280 கிமீ க்கு சாலைகளை சீரமைக்க பணம் ஒதுக்கி உள்ளோம் எனவும் கூறினார்.உத்திர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார் என தெரிவித்த அமைச்சர், அவர்களால் அதை செய்ய முடியுமா? என சவால் விடுத்தார்.தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என பதில் சொல்லிவிட்டார் என்றார். நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம் என கூறிய அவர் இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.

பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் ஆனால் நாங்கள் எப்போதும் போல ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம் அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை நாடாளுமன்ற உறுப்பினர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க