March 7, 2018
தண்டோரா குழு
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றபடும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில், நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், உ.பி., மாநிலம், மீரட்டின் மாவானா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திவிட்டு சென்றனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் விரைந்து வந்து புதிய சிலை நிறுவப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.