March 14, 2018
தண்டோரா குழு
உத்திரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் முதல்வர் ஆதித்யனாத், 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற புல்பூர் கோட்டையில் பாஜக வேட்பாளர் படுதோல்வியடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், புல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.இந்நிலையில் காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், யோகி ஆதித்யநாத்தின் கோட்டையான புல்பூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங் படேல் படுதோல்வி யடைந்துள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் 59 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
இத்தொகுதியில் ஆதித்யநாத் 1995, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.