• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரப் பிரதேச முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்

March 18, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பெரிய மாநிலமான 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 11-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. அதில் 324 தொகுதிகளில் பா.ஜ.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரவுள்ளது. எனினும், அங்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் பா.ஜ.க., முழுக்கவனம் செலுத்தி வந்தது.

இது தொடர்பாக டில்லி பா.ஜ.க., மூத்த நிர்வாகிகள், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசித்து வந்தனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பாஜக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம், லக்னோவில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வராக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

44 வயதாகும் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலிருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர். கோரக்பூர் மடத்தின் நிர்வாகியாகவும், இந்து யுவ வாகினி என்ற கலாசார அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க