• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!

May 3, 2017 தண்டோரா குழு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சாலையில் கைபேசியில் பேசிக்கொண்டு செல்லும் பெண்களுக்கு 21,௦௦௦ ரூபாய் அபராதம் என்று பஞ்சாயத்து நிர்வாகம் ஒன்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்திலுள்ள ஒரு கிராம பஞ்சாயத்து, அங்குள்ள சாலைகளில் செல்லும்போது, பெண்கள் கைபேசியில் பேசிக்கொண்டு நடந்தால், அவர்களுக்கு 21,௦௦௦ ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கிராம பஞ்சாயத்தின் தலைவர் உஸ்மான் கூறுகையில்,

“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கைபேசி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை தடுக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கட்டுப்படுத்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு வரும் புகார்களுக்கு ஏற்ற நடவடிக்கையை, அந்த குழுக்களின் உயர் அதிகாரிகள் எடுப்பர். ஒரு வேலை அந்த அதிகாரிகளால் நடவடிக்க எடுக்க முடியாத பட்சத்தில், அது காவல்துறையினர் கவனத்திற்கு கொண்டுப்போகப்படும்” என்றார்.

உத்தர் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு, ஒவ்வொரு நாளும் புது புது கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. அந்த வரிசையில், உத்தர பிரதேசத்தின் மதுராவில் பெண்கள் சாலையில் செல்லும்போது கைபேசி பயன்படுத்தினால் அபராதம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க