• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாளருக்கு அஞ்சலி

May 31, 2022 தண்டோரா குழு

உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாளருக்கு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி. மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

நேற்று முன்தினம் உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரிக்கு 14 பேர் வேனில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் கோவையை சேர்ந்த தனியார் ஆங்கில நாளிதழில் (தி இந்து) செய்தியாளர் கார்த்திக் மாதவன்(45) உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கார்த்திக் மாதவனின் உயிரிழப்புக்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள், செய்தி நிரூபர்கள் ஒளிப்பதிவாளர்கள் பலரும் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க