• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி போதாது – திருநாவுக்கரசர்

June 16, 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுவிப்பது தொடர்பாக இனி அரசியல் ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உதகை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர்,நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

விபத்தில் சிக்கியவர்களில் சிலர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்,ஆனால் அங்கு ஏ.சி வசதி இல்லை எனவும்,தேவைப்பட்டால் இவர்களை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் நிதியுதவி போதாது.குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து 20 லட்சம் இழப்பீடும்,ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும்,காயமடைந்தவர்களுக்கும் கனிசமாக நிதி உதவி செய்ய வேண்டும்.சுற்றுலா தளமான உதகையில் அதிநவீன வசதி கொண்ட மல்டி ஸ்பெசல் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும்,ஹிந்துஸ்தான் போட்டோ அரங்கை மருத்துவமனையாக மாற்றலாம் எனவும் ஆலோசனை கூறினார்.மலைபாதையில் நல்ல நிலையில் உள்ள பேருந்து இயக்கப்படுவதை போக்குவரத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க