• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு

March 10, 2020 தண்டோரா குழு

உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் அக்கல்லூரியின் ஆங்கிலத்துறையின் சார்பில் புராண இலக்கியங்களை மறுபரிசீலனை செய்யும் விதமாக REVISITNG MYTHS என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள்கருத்தரங்கு நடைபெற்றது.இக்கருத்தரங்கில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெல்லூர் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் ந. ரமணி சிறப்புரையாற்றி விழாவை துவக்கிவைத்தார்.பெங்களூர் கிறிசுத்து ஜெயந்தி கல்லூரியின் இணைப்பேராசிரியரான ஸ்டீபன் பாலக்காடு மெர்சிகல்லூரியின் உதவிப்பேராசிரியரான முனைவர். ஸ்ரீதேவி மேனனும் வள நபர்களாக இருந்து கருத்தரங்கை வழிநடத்தினர்.

ஏராளமானமாணவர்கள் பங்கேற்க,50க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை மாணவமாணவிகள்,ஆராய்ச்சிமாணவர்கள், மற்றும் பேராசிரியர்கள் விளக்கினர்.இக்கருத்தரங்கையொட்டி பல்வேறு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறைத்தலைவராகவும் கல்லூரியின் முதன்மைப்பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியரான முனைவர். மேரிஎலிசெபத் ஜோசஃபின் சிறப்புரை வழங்கி சான்றிதழ்களை வழங்கி விழாவை நிறைவுசெய்தார்.

மேலும் படிக்க