June 7, 2018
தண்டோரா குழு
உலகம் முழுவதும் ரஜினி காந்த நடித்த காலா திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.’கபாலி’
திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருட இடைவெளியில் இப்படம் திரையிடப்படுவதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் ‘காலா’ திரைப்படம் திரையிடப்படவுள்ள திரை அரங்குகள் முன் ரஜினி ரசிகர்கள் பாட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும்,கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் உதகையில் காலா திரைப்படமானது கணபதி திரையரங்கில் முதல் காட்சி 11.30 மணிக்கு திரையிடப்பட்டது.திரைப்படம் திரையிடுவதற்கு முன் நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.மேலும் திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
காலா திரைப்படத்தை பற்றி ரஜினி ரசிகர்கள் கூறும்போது,
இரண்டு வருடங்கள் ரஜினிகாந்தின் திரைப்படம் ஏதும் வெளி வராததால் நாங்கள் தீபாவளியை கொண்டாடவில்லை.தலைவரின் படம் வெளியான இன்று தான் எங்களுக்கு தீபாவளி என்று கூறினர்.