• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உணவுப் பொருட்களை செய்தி தாள்களில் பரிமாரக்கூடாது

December 29, 2016 தண்டோரா குழு

வியாபாரிகள் உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களில் வைத்து பரிமாறக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் விற்கும் வடை, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பொருட்களைச் செய்தித் தாள்களில் வைத்துப் பரிமாறுவதோ, பார்சல் செய்து கொடுப்பதோ உடல் நலத்திற்குத் தீங்கானது, அவ்வாறு தரப்படும் உணவுகளைப் பொதுமக்கள் உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.

செய்தித் தாள்களில் உள்ள மை பல்வேறு தீங்கு தரும் வேதிப் பொருட்களால் ஆனது, மேலும், பழைய செய்தித்தாள்களில் உள்ள பாக்டீரியா கிருமிகள் உடல் நலத்திற்கு வெகுவாக தீங்கு விளைவிக்க கூடியவை. இதனால் அஜீரணம், குடல் சம்பந்தமான நோய்கள் மற்றும் புற்றுநோய் சம்பந்தமான பாதிப்புகள் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் அபாயம் உண்டு.

எனவே, உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் செய்தித் தாள்களைப் பயன்படுத்தவேண்டாம். அதைப் போல், பாலிதீன் பைகளில் சாம்பார், தேநீர் போன்ற சூடான பொருட்களை பார்சல் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வியாபாரிகள், சிறு வியாபாரிகள் “உணவு பாதுகாப்பு சட்டத்தின் (2006) படி உரிமம் மற்றும் பதிவு செய்வதற்கான கால அவகாசாம் 2016ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்துடன் முடிந்து விட்டது. அதன் பின் நீட்டிக்கபடவில்லை. போதிய கால அவகாசம் முடிந்தும் இன்னும் பதிவு செய்யாமால் உள்ளவர்கள் உடனடியாகப் பதிவு செய்து வியாபாரத்திற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறினார்.

மேலும் படிக்க