March 14, 2018
தண்டோரா குழு
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், தன்ராஜ் உட்பட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை அளித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும்,கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், தன்ராஜ் உட்பட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.