• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உடல் உறுப்பு தானம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது

May 19, 2017 தண்டோரா குழு

தர்மபுரி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 22 வயது வாலிபர் நவநீத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ததில் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் (வயது 22), இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றிவருகிறார்.

இவர் விடுமுறைக்காக கடந்த 15-ஆம் தேதி பெங்களூரில் இருந்து பாலக்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கும்பொழுது தர்மபுரி அருகே நடந்த சாலை விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு எற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது தந்தை சங்கரநாராயணன் நவநீத் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்.

இதனை அடுத்து அவரது இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். மற்றும் கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல.ஜி.பழனிசாமி கூறுகையில்

“ மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும்.” என்றார்.

அதன் பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய நவநீத் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க