• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல்நலனில் பெண்களின் அக்கறை

May 18, 2016 தண்டோரா குழு.

மனித உடலை நோய்கள் தாக்குவது சகஜமான ஒரு காரியம். அப்படி நோய்கள் தாக்கும் போது அதற்கான சரியான மருத்துவ சிகிச்சை பெற்று மக்கள் அதில் இருந்து மீண்டு வருவதை நாம் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இன்றைய நவீன உலகில் மருத்துவர்கள் அறிவியல் முன்னேற்றத்தை உபயோகித்து மனித உயிருக்கு ஏற்படும் வியாதிகளைக் குணமாக்கி சாதனைகளைப் படைத்தது வருகிறார்கள்.

கமலா தேவி(45), உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வறுமையின் காரணமாக அவரை மருத்துவமனைக்குச் செல்ல அவருடைய கணவன் அனுமதி தர மறுத்துவிட்டார்.

அவருடைய கணவன் இறந்த பிறகு அதுவரை வலியின் வேதனையைத் தாங்கிக் கொண்டு இருந்த கமலாதேவி இதற்கு மேலும் வலியைத் தாங்க முடியாது என்று உணர்ந்து மருத்துவரைச் சந்திக்க முடிவுசெய்தார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த பிறகு அவருடைய வேதனைக்கான காரணத்தை கண்டுபிடித்து உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

வறுமையின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு கொண்டு வந்த இந்தியவறுமை திட்டம் அவருக்கு உதவியது. கடந்த வாரம் அவருக்கு நடந்த மூன்று மணி நேர அறுவை சிகிச்சையின் போது அவருடைய வலது கருப்பையில் இருந்து பெரிய அளவிலான கட்டியை வெளியே எடுத்தனர்.

இதையடுத்து அந்த மருத்துவர்கள் குழு மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தது. அது அந்தக் கட்டி இதுவரை யாரும் பார்த்திராத அளவான 95 கிலோ எடை இருக்கும் என்பதுதான்.

இது குறித்து கருத்து தெரிவித்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.எஸ். ஜக்கி கூறும்போது, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே, அந்தக் கட்டியில் இருந்து கசிவுகள் வெளியே வரத் துவங்கிவிட்டது. இதற்கு மேல் தாமதித்தால் உயிருக்கே ஆபத்து நேர்ந்திடும் என்பதால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எனத் தெரிவித்தார். மேலும், இதுவரை தனது வாழ்நாளிலேயே இவ்வளவு பெரிய கட்டியைப் பார்த்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்டி சுமார் 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. அந்தக் கட்டியை நோயியல் ஆய்வுக்கூடத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்திற்குத் தகுதி பெற வாய்ப்பு உண்டா என்று அறிய லிம்கா சாதனைகள் புத்தக நிறுவனத்திற்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ஜக்கி தெரிவித்தார்.

மேலும் படிக்க