• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனை முடிவுக்கு வந்தது

February 1, 2018 தண்டோரா குழு

சுழற்சி முறையில் வழக்குகள் பிரித்து ஒதுக்கப்படும் என உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதனால் உச்சநீதிமன்ற  நீதிபதிகள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் தேதிஉச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது. தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

மேலும், மற்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.தலைமை நீதிபதி குறித்து மற்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில், நீதிபதிகளின் பிரச்சனையில் விலகியே நிற்கபோவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வுபெற்ற 4 நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடந்த 14ஆம் தேதி கடிதம் எழுதினர். இதையடுத்து, வழக்குகள் சுழற்சி முறையில் பிரித்து ஒதுக்கப்படும் என உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதன்மூலம் நீதிபதிகள் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க