August 7, 2018
தண்டோரா குழு
உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி, வினித் சரண் மற்றும் KM ஜோசப் ஆகியோருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா பதவி பிரமானம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வினித் சரண், உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் ஆகிய மூவரையும் கொலீஜியம் பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று இந்த பட்டியலில் இடம்பெற்ற 3 நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் மூவருக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, இன்று பதவியேற்றுள்ள மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை சேர்த்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் உள்ள நிலையில், 6 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.