• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் பலி

March 1, 2022 தண்டோரா குழு

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் இன்று காலை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர்ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கார்கீவ் நகரில் ரஷ்யா ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற நான்காம் ஆண்டு மருத்துவம் படித்த மாணவர் நகரில் இருந்து தப்பிக்க ரயில் நிலையம் செல்ல முற்பட்டபோது வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்தார்.

போர் நடைபெறுவதால் உயிரிழந்த நவீன் உடலை உடனே எடுத்து வருவது சற்று சிரமம்.தகுந்த சூழல் வரும் போது நிச்சயம் உயிரிழந்த மாணவனின் உடலை பத்திரப்படுத்தி இந்தியாவிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நவீனின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.

உக்ரைனின் கார்கீவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார். அதே நகரில் இன்னும் 728 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி உள்ளனர்.காலையில் வெடிகுண்டு வீசி தகர்க்கப்பட்ட அரசு கட்டிடத்தில் இருந்து 2கிமீ தூரத்தில் 200 தமிழ் மாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க