January 20, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்துக்கு கர்நாடகவில் இருந்து அதிகளவிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் வட இந்தியர்களை குறிவைத்தே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை உக்கடம் லாரி பேட்டையில் போதைப்பொருட்கள் கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனங்களில், கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்பாஸ் மற்றும் ஜெய்னுல்லா அபுதீன் ஆகிய இருவரை கைது செய்து உக்கடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.