• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் பெரியகுளம் தடுப்பு சுவர் விவகராம் – அண்ணா பல்கலைக்கழக வல்லுநுர் குழு மூலம் ஆய்வு – மாநகராட்சி கமிஷனர் தகவல்

April 16, 2021 தண்டோரா குழு

உக்கடம் பெரியகுளம் தடுப்பு சுவர் விவகராம் , அண்ணா பல்கலைக்கழக வல்லுநுர் குழு மூலம் ஆய்வு என மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 8 குளங்களை புனரமைப்பு செய்திட ரூ.320 கோடியில் மதிப்பீல் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதில் ரூ.62.17 கோடி மதிப்பில் பெரிய குளத்தின் தெற்கு பகுதி குளக்கரையினை புனரமைப்பு செய்திட கதிர்வேல் அண்டு கோ ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது. இப்பணிகள் கடந்த மார்ச் 2019-ல் துவங்கப்பட்டு தற்சமயம் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி அதிகாலை பெரியகுளம் தெற்கு பகுதியின் எல்லை பகுதியில் தற்காலிகமாக கட்டப்பட்டு வந்த செங்கல் கட்டிடத்திலான 75 அடி நீளத்திலான தடுப்புச்சுவர் மண் மற்றும் மழை நீர் சேர்ந்து இருகிய காரணத்தினால் சரிந்து விழுந்தது.

இந்த தடுப்பு சுவர் எக்காரணத்தினால் சரிந்து விழுந்தது என்பதனை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடவியல் துறையின் தொழில்நுட்ப வல்லுநுர் குழுவினை நியமனம் செய்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த அறிக்கை பெறப்பட்டு பணியில் தொழில்நுட்ப தவறுகள் இருப்பின் அதற்கு காரணமான ஒப்பந்ததாரர் நிறுவனம், திட்ட மேற்பார்வை ஆலோசக நிறுவனத்தார் மற்றும் களப்பொறியாளர்கள் மீது தக்க மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது சம்பவ இடத்தில் இடிபாடுகள் முற்றிலும் அகற்றப்பட்டு சரிந்து விழுந்த செங்கற்கட்டிடத்திலான தடுப்பு சுவருக்கு பதிலாக புதியதாக கான்கிரீட்டிலான சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் செலவினங்கள் முழுமைக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் திட்ட மேலாண்மை கலந்தாலோசக நிறுவனம் பொறுப்பாவார்கள்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க