April 15, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புணரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்தது.
இதில் குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைத்தல், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், பாதசாரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய முடிந்தது.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது.இதனிடையே உக்கடம் பெரிய குளத்தின் கரும்புக்கடை அருகே சேரன் நகர் பகுதியில் உள்ள குளக்கரையில் சுமார் 12 அடி உயரம், 50 அடி நீளம் மதில் சுவர் அமைக்கப்படிருந்தது.
இந்நிலையில் கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெயத்தது. இதில் இந்த மதில் சுவர் இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை மூன்று மணி அளவில் சுவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை உக்கடம் பெரியகுளத்தில் மதில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.இது இடிந்தது தொடர்பாக விசாரனை நடைபெறும்,” என்றனர்.